கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2022 1:26 AM IST (Updated: 23 March 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

கரூர்
கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் வாங்கல் பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது தண்ணீர்பந்தல் பாளையம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பிரபு என்கிற பிரபாகரன்(வயது 37) மற்றும் டீ மாஸ்டர் முருகேசன் (36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 290 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story