கூட்டுறவு வங்கியை பெண்கள் முற்றுகை
ராஜபாளையத்தில் கூட்டுறவு வங்கியை பெண்கள் முற்றுகையிட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் கூட்டுறவு வங்கியை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நகை கடன் தள்ளுபடி
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் கூட்டுறவு நகர வங்கி உள்ளது. இந்த வங்கியில் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை ேசர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நகை கடன் பெற்றுள்ளனர்.
இதில் 267 நபர்கள் தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்றுள்ளதாக வங்கி முன்பாக அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. இதில் பெயர் இல்லாத வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
அவர் முறையான பதிலளிக்கவில்லை எனக்கூறி, பெண்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
வாக்குவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடக்கு போலீசார், பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகே தமிழக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி கிடையாது எனவும் வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட வாடிக்கையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story