அரசலாற்றில் புதிய பாலம் கட்டப்படுமா
கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையம்- துவரங்குறிச்சி பகுதிகளை இணைக்கும் வகையில் அரசலாற்றில் புதிய பாலம் கட்டப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கும்பகோணம்;
கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையம்- துவரங்குறிச்சி பகுதிகளை இணைக்கும் வகையில் அரசலாற்றில் புதிய பாலம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கும்பகோணம் நகரம்
கும்பகோணம் நகரின் வடபகுதியில் காவிரியும் தெற்கு பகுதியில் அரசலாறும் பாய்கிறது. அரசலாற்றின் தெற்கு கரை பகுதியில் அண்ணலக்ரஹாரம், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் அண்ணலக்ரஹாரம் மற்றும் தாராசுரம் ஆகிய பகுதிகளை கும்பகோணம் நகருடன் இணைக்கும் வகையில் பாலங்கள் அமைந்துள்ளன. ஆனால் எலுமிச்சங்காய் பாளையம் பகுதியில் உள்ள மக்கள் கும்பகோணம் நகருக்குள் நுழைய தாராசுரம் அல்லது அண்ணலக்ரஹாரம் பகுதி பாலத்தின் வழியாக கடந்து கும்பகோணம் நகருக்குள் செல்ல வேண்டி உள்ளது.
புதிய பாலம்
இதனால் எலுமிச்சங்காபாளையம் பகுதியில் இருந்து எதிர்க்கரையில் உள்ள துவரங்குறிச்சி பகுதியை அடைவதற்கு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய சூழல் உள்ளது. எனவே எலுமிச்சங்கா பாளையம்- துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அரசலாற்றின் 2 கரைகளையும் இணைத்து புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் எலுமிச்சங்காபாளையம் மற்றும் பட்டீஸ்வரம், முழையூர், உடையாளூர் உள்ளிட்ட பகுதி மக்கள் கும்பகோணம் நகரை வந்தடைய புதிய பாதை அமைவதுடன் எரிபொருள் விரயத்தை மிச்சப்படுத்த முடியும்.
இது குறித்து கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன் கூறியதாவது
எலுமிச்சங்கா பாளையம்- துவரங்குறிச்சி பகுதிகளை இணைக்கும் வகையில் அரசலாற்றின் கரைகளை இணைத்து புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதன் மூலம் அந்தப் பகுதி மக்களின் பயண தூரம் குறைவதுடன் நேர விரயம் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story