தில்லை மகா காளியம்மன் நடன வீதி உலா
தில்லை மகா காளியம்மன் நடன வீதி உலா நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆஸ்பத்திரி தெருவில் தா.பழூர் ரோட்டில் பழமை வாய்ந்த தில்லை மகா காளியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்வது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி நாளொன்றுக்கு ஒருவர் என தில்லை மகா காளியம்மன் வேடமணிந்து ஜெயங்கொண்டம் முக்கிய வீதிகளில் நகர் முழுவதும் கடைகள், நிறுவனங்கள் மற்றும் வீடு, வீடாகச் சென்று நடன வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி பிரசாதம் வழங்குவார்கள். அதன்படி இந்த ஆண்டும் நடன வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் தொடர்ந்து 9 நாட்கள் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து, 10-வது நாளான வருகிற 24-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் நடனமாடி அனைத்து பக்தர்களுக்கும் அருள்பாலித்து பிரசாதம் வழங்கி, வேடம் கலைந்து சன்னதிக்குள் இறங்கி விடும். அதனை தொடர்ந்து சன்னதியில் உள்ள மகா காளியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொருட்களால் அபிஷேக, ஆராதனை செய்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தில்லை மகா காளியம்மனை தரிசனம் செய்வார்கள்.
Related Tags :
Next Story