மாணவர் விஷம் குடித்து தற்கொலை
மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:
தந்தை இறந்ததால் மனவேதனை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் செங்கமுத்து. இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு குணா(வயது 21), அன்புச்செழியன்(18) என 2 மகன்கள் உண்டு.
இதில் அன்புச்செழியன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேதியியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் செங்கமுத்து இறந்து விட்டார். இதனால் அன்புச்செழியன் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் மனவேதனையுடன் இருந்து வந்தார். இதையடுத்து அவர் கல்லூரிக்கு செல்லாததை பார்வதி கண்டித்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்த அன்புச்செழியன் மயங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அன்புச்செழியனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அன்புச்செழியன் நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அன்புச்செழியனின் தாய் பார்வதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story