திருநங்கைகளின் மேம்பாட்டிற்கு குழு அமைக்கப்படும்-மந்திரி ஹாலப்பா ஆச்சார்


திருநங்கைகளின் மேம்பாட்டிற்கு குழு அமைக்கப்படும்-மந்திரி ஹாலப்பா ஆச்சார்
x
தினத்தந்தி 23 March 2022 2:00 AM IST (Updated: 23 March 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருநங்கைகளின் மேம்பாட்டிற்கு குழு அமைக்கப்படும் என்று மந்திரி ஹாலப்பா ஆச்சார் தெரிவித்துள்ளார்

பெங்களூரு: கர்நாடக மேல்-சபையில் உறுப்பினர் பாரதிஷெட்டி, திருநங்கைகள் தொடர்பான கேள்வி எழுப்பினார். அதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 20 ஆயிரத்து 266 பேர் உள்ளனர். அவர்களின் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அவர்களின் நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். அரசின் அனைத்து துறை பணி நியமனங்களிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீதம் ஒதுக்கீடு செய்ய விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் அதை சரியான முறையில் பின்பற்றுவது இல்லை. இனி வரும் நாட்களில் இந்த இட ஒதுக்கீட்டை சரியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஹாலப்பா ஆச்சார் கூறினார்.

Next Story