ஊர்க்காவல்படை வீரர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் நிறைவு


ஊர்க்காவல்படை வீரர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் நிறைவு
x
தினத்தந்தி 23 March 2022 2:02 AM IST (Updated: 23 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஊர்க்காவல்படை வீரர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் நிறைவு பெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் புதியதாக 12 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 14 ஊர்காவல் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்தநிலையில் பயிற்சி நிறைவு நாளான நேற்று ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஏற்றுக்கொண்டார். ஊர்க்காவல் படை வீரர்களின் கடமைகள், பொறுப்புணர்வு, காலம் தவறாமையின் முக்கியத்துவம் குறித்து அவர் அறிவுரைகளை வழங்கினார்.
இதில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை துணை சூப்பிரண்டு சுப்பராமன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி குரு நாராயணன், மண்டல துணைத் தளபதி சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story