வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த வியாபாரி
வீட்டில் அழுகிய நிலையில் வியாபாரி பிணமாக கிடந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 58). இவர் வண்டியில் பஜ்ஜி கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பழனியம்மாள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் ஆனந்தஜோதி திருமணமாகி தர்மபுரியில் உள்ளார். மகன் ஆனந்தராஜ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இதனால் அருணாச்சலம் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அருணாச்சலத்தின் உறவினரான ராமமூர்த்தி, கதவை திறந்து பார்த்தபோது அருணாச்சலம் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story