நீர்நிலைகளில் கோழி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்
நீர்நிலைகளில் கோழி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
சிவகாசி,
நீர்நிலைகளில் கோழி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறை தீர்க்கும் நாள்
சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவும் பல்வேறு துறைகளை சேர்ந்த 23 அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டனர்.
ஆக்கிரமிப்பு
அப்போது விவசாயிகள் கூறியதாவது:- வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ஒரு ஓடையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் உறுதி அளித்தார்.
சிவகாசி கோட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் மீன்பாசி ஏலம் இடம் காலத்தினை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்காமல் ஒரு வருட காலத்திற்கு ஒரு முறை என்ற பழைய முறையினை பின்பற்ற வேண்டும் என்றும், வியாபார நோக்கத்தில் மீன்களை வளர்க்க வசதியாக குளம் மற்றும் கண்மாய்களில் கோழி கழிவுகளை சிலர் கொட்டி வருவதாகவும், குளங்களில் உள்ள தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த விடாமல் சிலர் தடுப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ஆனைக்குட்டம் அணையின் ஷட்டரை சரி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story