இட்டமொழி: 2 வீடுகளில் நகை திருட்டு


இட்டமொழி: 2 வீடுகளில் நகை திருட்டு
x
தினத்தந்தி 23 March 2022 2:40 AM IST (Updated: 23 March 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

2 வீடுகளில் நகை திருட்டு நடந்தது

இட்டமொழி:
பரப்பாடி அருகே உள்ள கழுவூர் காலனியைச் சேர்ந்தவர் அய்யாக்குட்டி மகன் சுடலைமணி (வயது 33). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால் இவரது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 15 கிராம் தங்கச்சங்கிலி, 3 கிராம் மோதிரங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அக்கம்பக்கத்தினர் சுடலைமணி வீட்டு கதவு திறந்து கிடப்பது குறித்து அவரது அக்கா முத்துக்குமாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோர்ஜ் பிரேம்லால் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
இதேபோல் பணகுடி பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஏசுவடியான் (74). இவருடைய மகள் செல்வி. இவர் வெளிநாட்டில் உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு பணகுடி மாதா கோவில் தெருவில் உள்ளது. இந்த வீட்டை ஏசுவடியான் வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது வழக்கம். சம்பவத்தன்று ஏசுவடியான் செல்வி வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, கைக்ெகடிகாரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து ஏசுவடியான் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story