இரணியல் அருகே தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகை, ரூ.64 ஆயிரம் திருட்டு
இரணியல் அருகே தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
திங்கள்சந்தை,
இரணியல் அருகே தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
நகை திருட்டு
குருந்தன்கோடு அருகே மேல குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பாக்கியநாதன், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி டெல்பின்மேரி (வயது 49). நேற்றுமுன்தினம் டெல்பின்மேரி, தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். மதியம் வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த காப்பு, மோதிரம், தங்க சங்கிலி, கம்மல் உள்பட 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.64 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. யாரோ மர்மநபர்கள் ஆளில்லாததை கண்காணித்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story