சங்கரன்கோவில்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சங்கரன்கோவில்:
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தடையை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நேற்று மாலை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகர தலைவர் சதாம் உசேன் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான், வர்த்தகர் அணியைச் சேர்ந்த ஜாபர் அலி உஸ்மானி, ஆல் இந்தியா கவுன்சில் மாநில செயலாளர் சவுக்கத் அலி உஸ்மானி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் அபுதாஹிர், 20-வார்டு நகரசபை உறுப்பினர் சேக் முகம்மது மற்றும் இஸ்லாமிய பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story