சந்தன கட்டைகள் வெட்டி கடத்தியவர் கைது


சந்தன கட்டைகள் வெட்டி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 23 March 2022 4:41 AM IST (Updated: 23 March 2022 4:41 AM IST)
t-max-icont-min-icon

சந்தன கட்டைகள் வெட்டி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்:
சேலம் தெற்கு வனச்சரகர் சின்னதம்பி தலைமையில் வனவர்கள், டி.பெருமாபாளையம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 65) என்பதும், அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் பூசாரியின் உதவியாளர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் வனப்பகுதியில் இருந்து சந்தன கட்டைகளை வெட்டி கோவில் யாகத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். இதையடுத்து அவரை கைது செய்து சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Next Story