உவரி கடலில் ஆமை குஞ்சுகள் விடப்பட்டன


உவரி கடலில்  ஆமை குஞ்சுகள் விடப்பட்டன
x
தினத்தந்தி 23 March 2022 4:56 AM IST (Updated: 23 March 2022 4:56 AM IST)
t-max-icont-min-icon

உவரி கடலில் ஆமை குஞ்சுகள் விடப்பட்டன

திசையன்விளை:
உவரி கடற்கரையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடல் ஆமைகள் 200-க்கும் அதிகமான முட்டைகளை இட்டு சென்றது. இதுபற்றி உவரி கடலோர காவல்துறையினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள், உவரிக்கு வந்து ஆமை முட்டைகளை எடுத்து சென்று குஞ்சுபொறிக்க வைத்தனர். நேற்று அந்த ஆமை குஞ்சுகளை வனத்துறை உதவி ஆய்வாளர் அழகர், உவரி கடலோர காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கடலில் விட்டனர்.

Next Story