சேலத்தில் டாக்டரிடம் ரூ.80½ லட்சம் மோசடி


சேலத்தில் டாக்டரிடம் ரூ.80½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 23 March 2022 5:22 AM IST (Updated: 23 March 2022 5:22 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் டாக்டரிடம் ரூ.80½ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.

சேலம்:
மல்லூரை சேர்ந்தவர் கிருபாகரன், டாக்டர். இவருடைய  செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று இருந்தது. இதை நம்பி அவர் தொடக்கத்தில் சிறிய அளவில் முதலீடு செய்தார். அப்போது அவருக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்து உள்ளது. இதை நம்பி அவர் ரூ.80 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்தார். ஆனால் அதன்பிறகு அவருக்கு பணம் எதுவும் வரவில்லை. மேலும் குறிப்பிட்ட தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதுடன், மர்ம நபர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து கிருபாகரன், சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரிடம் ரூ.80 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story