வெளியூரை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் அரூர் அருகே பரபரப்பு


வெளியூரை சேர்ந்தவர்களுக்கு  பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் அரூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 23 March 2022 9:59 AM IST (Updated: 23 March 2022 9:59 AM IST)
t-max-icont-min-icon

வெளியூரை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து அரூர் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரூர்:
அரூர் அருகே உள்ள கொக்கராப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வெளியூரை சேர்ந்த 18 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் நிலஅளவீடு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று குமாரபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். வெளியூரை சேர்ந்தவர்களுக்கு இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோபிநாதம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story