வாணியம்பாடி தொகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வாணியம்பாடி தொகுதியில் நடைபெறும்  வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 March 2022 4:12 PM IST (Updated: 23 March 2022 4:12 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி தொகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே அம்பலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலாறு- மேல்பட்டரை கால்வாயில் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் 100 நீர் உறிஞ்சி குழிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்த பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

தொடர்ந்து, மல்லகுண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், கல்வி கற்றுத் தருவது குறித்தும் மாணவ- மாணவிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் குருபவாணிகுண்டாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ரகுகுமார், உதவி பொறியாளர் சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேசன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.அம்பலூர் ஊராட்சிமன்ற தலைவர் முருகேசன், உதவி பொறியாளர் சுதாகர், என்ஜினீயரிங் பிரிவு அதிகாரி அரசு மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story