காட்பாடியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
காட்பாடியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
காட்பாடி தாராபடவேடு கம்பர் தெருவை சேர்ந்தவர் ரவுடி சுரேஷ் என்கிற குருவி சுரேஷ் (வயது 35). இவர் கடந்த ஜனவரி மாதம் கஞ்சா விற்றபோது காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். சுரேஷ் மீது திருவண்ணாமலையை சேர்ந்த பங்க் பாபு கொலை வழக்கு உள்பட 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதைத்தவிர வழிப்பறி, கொலைமிரட்டல், அடி-தடி, கஞ்சா விற்பனை உள்பட 7 குற்றவழக்குகள் உள்ளன.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சுரேஷ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story