கே.வி.குப்பம் அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


கே.வி.குப்பம் அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 23 March 2022 4:39 PM IST (Updated: 23 March 2022 4:39 PM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் தாலுகா கவசம்பட்டு, பில்லாந்திப்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கான மனுநீதி நாள் முகாம் கவசம்பட்டு கிராமத்தில்  நடைபெற்றது. தாசில்தார் சரண்யா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவசம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் ஜம்பு வரவேற்றார். தனி தாசில்தார் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பேசினர். 

முகாமில் 156 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 128 மனுக்கள் ஏற்கப்பட்டன. முத்திரைக் கட்டண தனித்துணை கலெக்டர் ஜெ.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர் சரளா கலைவாணன், பில்லாந்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி வேலு, கிராம நிர்வாக அலுவலர் மோகனா உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல துணை தாசில்தார் கி.பலராமன் நன்றி கூறினார்.

Next Story