திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியே 12 லட்சம்
திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் ரூ.1 கோடியே 12 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, போன்றவற்றை செலுத்துகிறார்கள். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணம், இதேபோல் திருத்தணி முருகன் கோவிலுடன் இணைந்த 30 உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தையும் எண்ணுவதற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் திருக்கோவில் பணியாளர்களை கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 21 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 12 லட்சத்து 28 ஆயிரத்து 857 வருவாயாக கிடைத்தது. மேலும் 645 கிராம் தங்கம், 6 கிலோ 950 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story