தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 5:33 PM IST (Updated: 23 March 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தொழிற்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்,  

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் செவ்வை ஜெயபால் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தொழிலாளர்களின் உரிமையை பறிக்கின்ற வகையில் திருத்தம் செய்யப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமலாக்க வேண்டும், அமலாக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு நிதியம் உருவாக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story