தூத்துக்குடி மாநகராட்சியில் இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாநகராட்சியில் இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அமெரிக்கென் ஆஸ்பத்திரி ரவுண்டானா, ஆனந்த விநாயகர் கோவில் மற்றும் 3 வது மைல் எப்.சி.ஐ. குடோன் ஆகிய பகுதிகளில் ஆட்டோ ஸ்டாண்டு பலகை வைத்திருந்தனர். அதனை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாநகர் மாவட்ட இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆட்டோ தொழிலாளர்கள் தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அகற்றிய சங்க பலகைகளை அதே இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகளிடம் மாநகராட்சி உதவி ஆணையர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்வகணேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சரவணகுமார் ராகவேந்திரா, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர்கள் சிவலிங்கம், பலவேசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story