ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 23 March 2022 6:17 PM IST (Updated: 23 March 2022 6:17 PM IST)
t-max-icont-min-icon

கீழ்குடி கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தொண்டி, 
திருவாடானை தாலுகா கட்டவிளாகம் ஊராட்சி கீழ்குடி கிராமத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஆற்றுப் புறம் போக்கில் சுமார் 50 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் முழுமை யாக அகற்றப்பட்டன. மங்கலக்குடி வருவாய் ஆய்வாளர் ஷகிலா பேபி, குறு வட்ட நில அளவர் ராஜதுரை, கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story