கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்


கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 6:28 PM IST (Updated: 23 March 2022 6:28 PM IST)
t-max-icont-min-icon

கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில் 
 அவினாசி அருகே கருவலூரில் பிரசித்திபெற்ற  மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். அதன்படி  இந்த ஆண்டு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  கடந்த 19ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன்  தொடங்கியது. அதை தொடர்ந்து மாரியம்மன் 20ந் தேதி பூதவாகனத்திலும்,  21ந் தேதி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
நேற்று முன்தினம் அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து திருக்கல்யாணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு அம்மனை தரிசனம் செய்தனர். றேந்று காலை  6 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் ரதத்தின் மீது வீற்றிருந்த மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அதிர்வேட்டு முழங்க பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேர்நிலையிலிருந்து சிறிது தூரம் இழுத்து நிறுத்தப்பட்டது. 
தெப்பதேர் உற்சவம் 
மீண்டும் இன்று  நாளை  தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. 26 தேதி இரவு தெப்பத்தேர் உற்சவமும்,  பரிவேட்டை ஆகியவை நடக்கிறது. 27ந் தேதி காலை 7 மணிக்கு தரிசன விழாவும், இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் விழா நடக்கிறது. 30ந் தேதி பாலாபிஷேகம் மற்றும் மறுபூஜை நடக்கிறது. தேர்த் திருவிழாவில் அவினாசி, அன்னூர், நம்பியாம்பாளையம், வெள்ளியம்பாளையம், ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story