மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர்,
பேரணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடிநீர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் நகராட்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் ஆழ்துளை கிணறு மற்றும் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணறு போன்றவற்றில் உள்ள நீர் மாதிரிகளை சேகரித்து அதனை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் செயல்முறை விளக்கம் வாயிலாக பரிசோதனை செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் அமலதீபன், திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story