ஜெயின் மத துறவிகள் நடைபயணம்


ஜெயின் மத துறவிகள் நடைபயணம்
x
தினத்தந்தி 23 March 2022 7:43 PM IST (Updated: 23 March 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

ஜெயின் மத துறவிகள் நடைபயணம்

மலைக்கோட்டை, மார்ச்.24-
ஜெயின் சமூக ஒற்றுமையை வலியுறுத்தியும், உலக நன்மைக்காகவும் ஜாகோ என்கிற ஜெயின் ஆக்டிவிட்டி குளோபல் ஆர்கனைசேஷன் சார்பாக நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஜெயின் மத துறவி ஆச்சாரியார் விமல் சாகர் சுரிஜி தலைமையில் வந்த இந்த நடைபயணம் இன்று திருச்சி வந்தது. இந்த நடைபயணத்தில் 7 துறவிகள், 5 உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்டு குஜிலி தெருவில் உள்ள ஸ்ரீ குஜராத்தி சமாஜ் கட்டிடத்தில் இருந்து புறப்பட்டு ஜாபர்ஷா தெரு, கல்யாணி கவரிங், மேலபுலிவார்டு ரோடு, பெரிய கம்மாளத் தெரு, பெரிய கடை வீதி, பெரிய செட்டி தெரு வழியாக மீண்டும் ஸ்ரீ குஜராத்தி சமாஜ் ராஜ் ராஜேந்திர சூரி பவன் கட்டிடத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்தனர்.

Next Story