குன்னூரில் பலத்த மழை குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


குன்னூரில் பலத்த மழை குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 23 March 2022 9:44 PM IST (Updated: 23 March 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் பலத்த மழை குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

குன்னூர்

குன்னூரில்  மாலை 6.30 மணிக்கு திடீரென்று மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல இந்த மழை பலத்த மழையாக உருவெடுத்தது. இதனால் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மாடல்அவுஸ் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அடைப்பட்டதால் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. 

மேலும் இந்த தண்ணீர் சுமார் 10 வீட்டிற்குள் புகுந்தது. இதையடுத்து வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் மோட்டார் வைத்தும், வீட்டில் உள்ள பாத்திரங்களை வைத்தும் வெளியேற்றினர். 

மேலும் மாடல் அவுஸ் செல்லும் பிரதான சாலையில் இடுப்பு அளவு தண்ணீர் இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்ப்பட்டது. ஒருசில வீடுகளில் பிரிட்ஜ் போன்ற மின்னணு பொருட்கள் நாசமானது. 

குன்னூரில் நேற்று பெய்த மழையால், குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாடல் அவுஸ் பகுதியில் கழிவு நீர்கால்வாய், நடைபாதை, ஓடை ஆகியவற்றை ஆக்கிரமித்து சிலர் கட்டிடம் கட்டியுள்ளனர். 

இதனால் தான் மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் வந்துள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் தடையின்றி செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story