கோத்தகிரி அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்


கோத்தகிரி அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 9:45 PM IST (Updated: 23 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. 

மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் 

கோத்தகிரி சக்கத்தா கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சிறப்பு வாய்ந்த பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஒரு வாரம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

 இந்த ஆண்டு திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் நிகழ்ச்சியின் முக்கிய நாளான காலை தேரோட்டம் நடந்தது. 

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து சக்கத்தா கிராமத்தில் இருந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அரவேனு பஜார் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கோவிலை சென்றடைந்தது. 

பக்தர்களுக்கு அன்னதானம்

பின்னர் அங்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பக்தர்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தவாறு சென்றது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. 

வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு சிங்க வாகன ஆரோகனம் மற்றும் மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
 ஏற்பாடுகளை இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story