ஊட்டியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி


ஊட்டியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 23 March 2022 9:45 PM IST (Updated: 23 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஊட்டி

நீலகிரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், மதுபானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடைபெற்றது. 

பேரணியை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி லோயர் பஜார், மணிக்கூண்டு, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றது. 

பேரணியில் மது குடிப்பதால் குடும்பத்தில் பொருளாதார பிரச்சனை ஏற்படும், விபத்து ஏற்படுவதால் உயிரிழப்பு ஏற்படும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் சென்றனர். 

மேலும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், உதவி ஆணையர் (பொறுப்பு) சேகர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story