ஊட்டியில் பால் உற்பத்தியாளர்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி


ஊட்டியில் பால் உற்பத்தியாளர்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 23 March 2022 9:45 PM IST (Updated: 23 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் வருமானத்தை ஈட்டும் வகையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி தொடங்கியது.

ஊட்டி

கூடுதல் வருமானத்தை ஈட்டும் வகையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி தொடங்கியது.

பயிற்சி முகாம்

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம், தேசிய தேனீ வாரியம், தேசிய பால்வள வாரியம் சார்பில் நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு அறிவியல் முறையில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள ஆவின் பயிற்சி மையத்தில்  நடைபெற்றது.

முகாமை தேசிய பால்வள வாரிய முதுநிலை மேலாளர் கீர்த்திகா தொடங்கி வைத்து பேசியதாவது:- 

கடந்த 1974-ம் ஆண்டு வெண்மை புரட்சி ஏற்பட்டதை தொடர்ந்தது கிராம அளவில் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்பில் தீவனம் போடுவது, கவனிப்பது, உடல்நிலையை பராமரிப்பது போன்றவற்றில் பெண்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

வருமானம் கிடைக்கும்

கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்களில் உள்ளவர்கள் கூடுதலாக வருமானத்தை ஈட்டுவதற்காக இந்த பயிற்சி தமிழகத்திலேயே முதல் முறையாக நீலகிரியில் நடத்தப்படுகிறது. இதன் மூலம் நீடித்த நிலையான வருமானம் கிடைக்கும். 

விவசாய நிலங்களில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் தேனீக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளது. தேனீக்கள் இருப்பதால் தான் மகரந்த சேர்க்கை மூலம் பயிர் மகசூல் அதிகரிக்கிறது. 

தேனீக்கள் எண்ணிக்கை குறைந்தால் மகசூல் அளவும் குறையும். நாம் வாழ்வதற்கு பூச்சிகள், விலங்குகள் போன்றவையும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார். 

தேனீ வளர்ப்பு

நீலகிரி மாவட்ட ஆவின் பொதுமேலாளர் வெங்கடாசலம் பேசும்போது, தேனீ வளர்ப்பு திட்டம் ஒரு முன்னோடி திட்டம் ஆகும். தேனீ வளர்ப்பு மூலம் மகரந்த சேர்க்கையை அதிகரித்து விவசாயத்தை பெருக்க முடியும். 

இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். கடந்த 40 ஆண்டுகளாக பால் உற்பத்தி செய்து வரும் நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.


Next Story