நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 23 March 2022 10:11 PM IST (Updated: 23 March 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தியால், ஆண்டிப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது

ஆண்டிப்பட்டி: 

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டியை சுற்றியுள்ள வைகை ஆற்றங்கரையோர பகுதிகளான குன்னூர், அம்மச்சியாபுரம், டி.அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூனாண்டிப்பட்டி, புதூர், புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதியில்  நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் பெரியகுளம், உத்தமபாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்திலும் அல்லது தனியார் கொள்முதல் நிலையத்திலும் சாகுபடி செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் அதிகரித்து வந்தது. எனவே ஆண்டிப்பட்டி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும் என்று விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ யிலும் செய்தி வெளியானது. 


இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, ஆண்டிப்பட்டி அருகே குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் நெல்லை கிலோ ரூ.20.60 பைசாவுக்கும், ஒரு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 60 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த நிலையம் நிரந்தரமாக செயல்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story