உளுந்தூர்பேட்டை அருகே பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து ரூ 20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
உளுந்தூர்பேட்டை அருகே பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து ரூ 20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
உளுந்தூர்பேட்டை
பேக்கரி கடை
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை கடை வீதியில் உள்ள பேக்கரி கடையில் நேற்று காலை 7 மணியளவில் கரும்புகை வெளியே வர தொடங்கியது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
ஆனால் அடு்த்த சில நிமிடங்களில் கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் உருவானது. கடை பூட்டி இருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென கொழுத்து விட்டு எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள்
கடையின் உள்ளே சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இருந்ததால் அச்சம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை? இது குறித்து போலீஸ், வருவாய் மற்றும் தீயணைப்புதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து காரணமாக எலவனாசூர்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
Related Tags :
Next Story