கிராமப்புறங்களில் உள்ள சேவை மைய கட்டிடத்தை பயன்படுத்த அனுமதி


கிராமப்புறங்களில் உள்ள சேவை மைய கட்டிடத்தை பயன்படுத்த அனுமதி
x
தினத்தந்தி 23 March 2022 10:44 PM IST (Updated: 23 March 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் உள்ள சேவை மைய கட்டிடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

விழுப்புரம், 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா விழுப்புரம் குபேர பிளாசாவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஆலோசனைக்குழு உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான புஷ்பகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் லட்சுமணன், இணை செயலாளர் ஜெயராமன், துணை செயலாளர் மணிபாலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரூபலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, சங்கத்தின் புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

   இக்கூட்டத்தில் போராட்ட கால 19 நாள் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், 5 வருடமாக நிலுவையிலுள்ள 17 (பி) குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், உட்பிரிவு பட்டா மாறுதல் பணியை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் சிறப்பாக மேற்கொள்வது, கிராமப்புறங்களில் செயல்படாமல் உள்ள சேவை மையக்கட்டிடத்தின் ஒருபகுதியை கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்வதற்கு  ஒதுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விழுப்புரம் வட்ட தலைவர் உமாபதி, வட்ட செயலாளர் அன்பு, பொருளாளர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், வானூர், செஞ்சி ஆகிய வட்டங்களை சேர்ந்த அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Next Story