10 அகதிகள் நடுக்கடலில் படகில் தவிப்பு
என்ஜின் பழுதானதால் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த அகதிகள் 10 பேர் நடுக்கடலில் படகில் தவித்தனர்.
ராமேசுவரம்,
என்ஜின் பழுதானதால் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த அகதிகள் 10 பேர் நடுக்கடலில் படகில் தவித்தனர்.
ஆறுதல்
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வந்து மண்டபம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை நேற்று ராமேசு வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேராஜா, எமரிட், சகாயம் கிளாட்வின் உள்ளிட்டோர் நேரில் வந்து சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி ஆறுதல் கூறினார்கள்.
அப்போது மீனவர் சங்க தலைவர் சேசூராஜாகூறும் போது:- தொப்புள் கொடி உறவான இலங்கையில் இருந்து வரும் தமிழ் மக்கள் மீது அரசு வழக்கு பதிவு செய்யாமல் அகதிகளாக பதிவு செய்து மீண்டும். அவர்கள் தமிழகத்தில் உள்ள முகாம்களிலேயே வாழ்வதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இதன் மூலம் இருநாட்டு மக்களின் உறவுகள் இன்னும் ஒற்றுமை மேம்படும். இவ்வாறு அவர்கூறினர்.
இதனிடையே ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பாலம் கடற்கரையில் நேற்றுமுன்தினம் இரவில் ஒரு பிளாஸ்டிக் படகில் 10 பேர் அகதிகளாக வந்திறங்கினர். இந்த 10 பேர் வந்த பிளாஸ்டிக் படகானது கடந்த திங்கட்கிழமை அன்று மாலை என்ஜினில் பழுது ஏற்பட்டு கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் படகு நடுக்கடலில் நின்றுள்ளது. படகை சரி செய்ய முயற்சி செய்தும் சரி செய்ய முடியவில்லை.
தவிப்பு
இதனால் 30 மணி நேரத்திற்கு மேலாக குழந்தைகளுடன் இந்த படகிலேயே நடுக்கடலில் தவித்துள்ளனர். அந்த வழியாக எந்த ஒரு மீன்பிடி படகும், ரோந்து படகும் வராததால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு படகிலேயே தவித்துள்ளனர். அதன்பின்னர் படகின் டிரைவர் சிவரத்தினம் கஷ்டப்பட்டு படகின் என்ஜினை சரிசெய்த பின்னர் நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story