யாக சாலை பூஜைகள் தொடக்கம்


யாக சாலை பூஜைகள் தொடக்கம்
x
தினத்தந்தி 23 March 2022 10:57 PM IST (Updated: 23 March 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாக சாலை பூஜைகள் தொடங்கின. இதற்காக 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் கூறினார்.

திருக்கடையூர்;
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாக சாலை பூஜைகள் தொடங்கின. இதற்காக 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் கூறினார். 
குடமுழுக்கு
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் குடமுழுக்கு 27- ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. குடமுழுக்கையொட்டி  100 கால் மண்டபம் அருகில் பிரமாண்டமான முறையில் யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால யாக பூஜைகள் நேற்று தொடங்கியது. யாக சாலை பூஜைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
3 லட்சம் பக்தர்கள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெறும். அபிராமி அம்மன் காலசம்ஹார மூர்த்தி ஆகிய சாமிக்கு நவாக்கினி ஹோமம், முருகன், விநாயகர் உள்ளிட்டோருக்கு பஞ்சாக்னி ஹோமம், மற்றும் பரிவார சாமிக்கு ஏகாக்னி ஹோமம் நடைபெறும். மேலும் 120 வேத விற்பன்னர்கள் யாகசாலை பூஜைகளை  செய்வார்கள். 27 திருமுறை ஓதுவார்கள் தேவாரம், திருப்பதிகம் பாடுவார்கள். மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி போன்றவை செய்யப்படும். குடமுழுக்கில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story