திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்
காரைக்குடி அருகே திடீரென தீப்பிடித்து வேன் எரிந்தது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் வேனில் காரைக்குடி தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். நேற்று செஞ்சை அருகே சரக்குகளோடு வேனில் சென்றபோது வேனில் இருந்த பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் வேன் நடுரோட்டில் திடீரென தீ பிடித்தது. உடனே அருண்குமார் வேனிலிருந்து வேகமாக இறங்கி கண்ணி மைக்கும் நேரத்தில் உயிர் தப்பினார். அப்போது அவ்வழியாக சாலை அமைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் லாரியிலிருந்து தண்ணீரை குழாய்கள் மூலம் ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினரும் வந்து தீயை முழுவதுமாக அணைத்தனர். வேன் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் காரைக்குடி- தேவகோட்டை பகுதிக்கான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்துகாரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story