மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளர்கள் பலி காவேரிப்பட்டணம் அருகே சோகம்
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
கூலித்தொழிலாளர்கள்
திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 42). இவரும், கிருஷ்ணகிரியை அடுத்த மகாராஜகடை எம்.சி. பள்ளி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (43) என்பவரும் பையூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டேம் ரோடு அருகே சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவேரிப்பட்டணம் போலீசார், விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார். விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story