அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்


அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 March 2022 11:18 PM IST (Updated: 23 March 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வெண்ணந்தூர்:
வெண்ணந்தூரை அடுத்த அத்தனூர் பேரூராட்சியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் கடைகள், பேக்கரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினாலோ, அதனை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். 

Next Story