தர்மபுரி மாவட்டத்தில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை
தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கட்டிட மேஸ்திரி
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள டொக்கம்பட்டியை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். சக்திவேலுக்கு மது குடிக்கும் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 20-ந் தேதி சக்திவேல் விஷம் குடித்து விட்டு தோட்டத்தில் மயங்கி கிடந்தார். இதை கண்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் கொமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (35). தொழிலாளி.இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் இவருடைய மனைவி தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணேசன் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story