குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு
குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டது.
கரூர்,
கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மாநகராட்சிக்கு உட்பட்ட இனாம் கரூர், ராமானுஜ நகர், திருவிழா நகர், நரசிம்மபுரம், பசுபதிபாளையம், தெற்கு ஜவகர் பஜார், தாந்தோணிமலை, பாரதிதாசன்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கரூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுகிறது.
Related Tags :
Next Story