இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருத்துறைப்பூண்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருத்துறைப்பூண்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகத்சிங் நினைவு தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு தலைமை தாங்கினார்.
ஊர்வலம்
முன்னதாக திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் சலாவுதீன், மாவட்ட பொருளாளர் வேலவன், மாவட்ட துணைத் தலைவர் விஜய், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் வக்கீல் சிவசாகர் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயராஜ், பகத்சிங், சரவணன், கிஷோர், ஒன்றிய தலைவர்கள் மதன்சிங், வீரசேகரன், அருள்குமார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story