காளியம்மன் கோவில் திருவிழா
காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
நச்சலூர்,
நச்சலூர் அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் மற்றும் பால் குடம் எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு புனிதநீர் மற்றும் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்கு ஏற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Related Tags :
Next Story