நீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டை 4½ மணி நேரத்தில் 2022 முறை எழுதிய சிறுவன்

நீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டை 4½ மணி நேரத்தில் 2022 முறை எழுதிய சிறுவன்
x
தினத்தந்தி 23 March 2022 11:39 PM IST (Updated: 23 March 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

உலக தண்ணீர் தினத்தையொட்டி நீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டை 4½ மணி நேரத்தில் 2022 முறை எழுதி மயிலாடுதுறை சிறுவன் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை, மார்ச்.24-
உலக தண்ணீர் தினத்தையொட்டி நீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டை 4½ மணி நேரத்தில் 2022 முறை எழுதி மயிலாடுதுறை சிறுவன் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். 
தண்ணீாின் மூலக்கூறு
மயிலாடுதுறையை சேர்ந்தவர் கல்யாண்குமார். இவருடைய மனைவி  உமாமகேஸ்வரி. இவர்களின் மகன் சாய்மித்ரன்(வயது4½). தற்போது   யூ.கே.ஜி. படித்து வரும் சாய்மித்ரன் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தண்ணீரின் மூலக்கூறு வடிவமான H2O பார்முலாவை 4½ மணி நேரத்தில் 150 சதுர அடியில் நடப்பு ஆண்டை குறிக்கும் வகையில் 2022 தடவை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
தண்ணீர் இன்றி உலகம் இல்லை
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு  சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இ்ந்த நிகழ்வு கடினமானதாக இருந்தாலும் தண்ணீர் இன்றி உலகு இல்லை என்பதை உணர்த்தவே தனது மகன் இந்த சாதனையில் ஈடுபட்டார் என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Next Story