மாணவர்கள், தினசரி நாளிதழ் வாசிப்பதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்


மாணவர்கள், தினசரி நாளிதழ் வாசிப்பதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 23 March 2022 11:47 PM IST (Updated: 23 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள், தினசரி் நாளிதழ் வாசிப்பதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்:
மாணவர்கள், தினசரி் நாளிதழ் வாசிப்பதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி மையம் இணைந்து நடத்தும் விடுதி மாணவர்- மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடமைப்பட்டவர்களாக
இளமை பருவ காலத்தில் ஒவ்வொருவருக்கும், கலெக்டர், டாக்டர், என்ஜினீயர் என கனவுகளுடன் பலவித தேடல்கள் இருக்கும். நமது கனவினை நோக்கிய பாதைக்கு பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கு தீர்வுகளை அடைவதற்கான வழிமுறைகளும் பல உள்ளன. உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உங்கள் தேடலினை பொறுத்தே அமையும்.
பெற்றோர் உங்கள் மீது வைத்த முழு நம்பிக்கையினை நீங்கள் காப்பற்ற கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் நூலகங்களுக்கு செல்வதையும், தினசரி நாளிதழ் வாசிப்பதையும் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். கல்வியினை மட்டுமே முழு நோக்கமாக கொண்டு உங்கள் கடமையினை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மத்திய பல்கலைக்கழகம், பல்பொருள் அறிவியல் துறை உதவி பேராசிரியர் குணசேகரன், திரு.வி.க. அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் நடராஜன், தமிழியல் ஆய்வாளர் மற்றும் மனிதவள மேம்பாட்டு் பயிற்றுனர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story