ரூ.40 லட்சத்தில் புதிய தார்ச்சாலை


ரூ.40 லட்சத்தில் புதிய தார்ச்சாலை
x
தினத்தந்தி 23 March 2022 11:54 PM IST (Updated: 23 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

புதிய தார்ச்சாலையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

காரைக்குடி,
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள நெசவாளர் காலனியில் மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியனின் நிதியில் இருந்து  ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலைகள் அமைக்கப்பட்டன. புதிய சாலையை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சாக்கோட்டை யூனியன் ஆணையாளர் கேசவன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், ஒன்றிய துைண செயலாளர் சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story