அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 March 2022 11:55 PM IST (Updated: 23 March 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குளித்தலை, 
குளித்தலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி மாணவ-மாணவிகள் செல்போன்களை தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்களுக்கு தேவையான தகவல்கள் இன்றி வேறு எந்த பதிவுகளையும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் எந்தெந்த வகையில் செல்போன்களால் பெண்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர் என்றும் சைபர் கிரைம் என்றால் என்ன என்பது குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார். அதுபோல சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் குறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது மாவட்ட சைபர் கிரைம் பிரிவு அலுவலகத்திலோ அதற்கான தொலைபேசி எண்ணை பயன்படுத்தி புகார் அளிக்கலாம் என்றார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆறுமுகம், மஞ்சுளா, குளித்தலை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story