மீன்பிடி திருவிழா: கண்மாயில் மீன்களை அள்ளிய கிராம மக்கள்


மீன்பிடி திருவிழா: கண்மாயில் மீன்களை அள்ளிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 23 March 2022 11:56 PM IST (Updated: 23 March 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட குட்டையன் பட்டி பகுதியில் கோட்டை மலை அடிவாரத்தில் கீழ் சந்தி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.

சிங்கம்புணரி, -
கீழ்சந்தி கண்மாயில்  மீன்பிடி திருவிழா நடந்தது.
கண்மாய்
 சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட குட்டையன் பட்டி பகுதியில் கோட்டை மலை அடிவாரத்தில் கீழ் சந்தி கண்மாய் உள்ளது. 
கோடை காலம் தொடங்கிய நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியதால் கிராமத்தினர் மற்றும் கீழ் சந்தி ஆயக்கட்டு பாசன வசதி பொறுப்பாளர் சுப்பிரமணியம் தலைமையில், செயலாளர் தினேஷ் பொன்னையா, பொருளாளர் அருள் ஆகியோர் முன்னிலையில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. 
அதனை தொடர்ந்து சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமத்தினர் கண்மாயில் இறங்கி மீன்பிடிக்க தயாரானார்கள். கண்மாய் பொறுப் பாளர்கள் ஆயக்கட்டு காரர்கள் கண்மாய் கரையில் வருண பகவானை வேண்டி பூஜை செய்து தொடர்ந்து கண்மாய் கரையில் இருந்து பச்சைக்கொடி காட்டினர். 
ஆரவாரம்
உடனே கண்மாயை சுற்றி நின்றவர்கள் கண்மாய்க்குள் இறங்கி வலைகளை கொண்டு  மீன்களை போட்டி போட்டு பிடித்து மகிழ்ந்தனர். கைகளில் சிக்கிய மீன்களை உற்சாகத ்துடன் காண்பித்து ஆரவாரம் செய்தனர். மீன்பிடி திரு விழாவில் அதிக அளவில் கெளுத்தி, கெண்டை, கெண்டைபொடி மீன், அயிரை மீன், ஜிலேபி  மற்றும் கட்லா, கட்லா, விரா மீன் உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. கிடைத்த மீன்களைக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு சென்று சமையல் செய்து சாப்பிட்டனர்.  கிராமங்களில்  உள்ள அனைத்து வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது. 

Next Story