இயற்கை விவசாயத்துக்கு மாறும் விவசாயிகள்


இயற்கை விவசாயத்துக்கு மாறும் விவசாயிகள்
x
தினத்தந்தி 23 March 2022 11:58 PM IST (Updated: 23 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் இயற்கை விவசாயத்துக்கு மாறி வரும் விவசாயிகள் தங்கள் வயல்களில் ஆடு, மாடுகளை கொண்டு கிடை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

வேதாரண்யம்;
வேதாரண்யம் பகுதியில் இயற்கை விவசாயத்துக்கு மாறி வரும் விவசாயிகள் தங்கள் வயல்களில் ஆடு, மாடுகளை கொண்டு கிடை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 
விளைநிலங்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு, செட்டிபுலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் மழையை நம்பி மட்டுமே ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம். முற்காலத்தில் விவசாயிகள் சாகுபடிக்கு காலங்காலமாக  இயற்கை உரத்தை பயன்படுத்தி வந்தனர். அதன்பின் செயற்கை உரத்துக்கு மாறிய விவசாயிகள் தற்போது கடந்த சில ஆண்டுகளாக செயற்கை உரங்களை தவிர்த்து மீண்டும் இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளனர். 
இயற்கை உரம்
ரசாயன உரங்கள் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த தாங்கள்(விவசாயிகள்) மீண்டும் பழையபடி இயற்கை உரத்துக்கு மாறியதாக அவர்கள் கூறியுள்ளனர். தற்போது வயல்களில் இயற்க உரத்துக்காக ஆடு, மாடுகளை கொண்டு கிடை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 3 முறை மாடுகளையும், 2 முறை ஆடுகளையும் வயல்களில் கட்டி மண்ணை வளமாக்கி இயற்கையான சாகுபடிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரத்துக்கு மாறுவதால் இந்த விவசாயிகளுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Next Story