வாணியம்பாடியில் சூறாவளி காற்றுடன் மழை
வாணியம்பாடியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் தென்னை மரம் சாந்து விழுந்தது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நெக்குந்தி, திருமாஞ்சோலை, புதூர், வள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத், மதனாஞ்சேரி, உதயேந்திரம் ஆகிய பகுதிகளில கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று பிற்பகல், திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து காற்றுடன் பலத்த மழை பெய்தது.
மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்றால் செட்டியப்பனூர் பகுதியில் சாலை ஓரம் இருந்த தென்ன மரம் விழுந்ததில் மின் கம்பம் சேதம் அடைந்து மின்சாரம் தடைபட்டது.
மின்சார துறையினர் விரைந்து சென்று மின் கம்பிகளை சரி செய்து சாலை நடுவில் இருந்த தென்ன மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story