போலி தங்க காசுகளை விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது
போலி தங்க காசுகளை விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள நகை அடகுக்கடை ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி போலி தங்க காசுகளை விற்று பணம் பெற்ற வழக்கில் ஏற்கனவே லாடபுரம் மேற்கு காலனியை சேர்ந்த வரதராஜன், செட்டிகுளத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகியோரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய எளம்பலூர் ரோடு ஆம்.எம்.கே. நகர் 2-வது தெருவை சேர்ந்த பிரபு(வயது 53), எசனை பாப்பாங்கரையை சேர்ந்த சுரேஷ் என்கிற பாப்பாங்கரை சுரேஷ்(33) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் சுரேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பிரபுக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் மீது ஏற்கனவே பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story